100 கோடி இயக்குனருடன் கை கோர்க்கும் அஜித்

அஜித்
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. படப்பிடிப்புகள் வேகமாக நடக்க அவ்வப்போது இடைவேளை விடப்பட்டு வேலைகள் நடக்கிறது.

தற்போது புதுவருடத்தை அஜித் துபாயில் கொண்டாடி வருகிறார். இன்று அவரது மகள் அனோஷ்காவிற்கும் பிறந்தநாள், எனவே குடும்பத்துடன் செம கொண்டாட்டத்தில் உள்ளார் அஜித்.

மகள் பிறந்தநாளை கப்பலில் கொண்டாடிய போது எடுத்த வீடியோ, ரசிகையுடன் நடனம் ஆடியபோது எடுத்த வீடியோ என சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.

புதிய கூட்டணி
இந்நிலையில் அஜித் தற்போது தனக்கு எப்போது படம் பண்ண வேண்டும் என தோன்றுகிறதோ அப்போது செய்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்.

அதனாலேயே வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்று நடிக்கிறார்.

தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, ஆதிக், வெற்றிமாறன் என அடுத்தடுத்து படங்களை அடுக்கி வருகிறார்.

இப்போது புதிய வரவாக கே ஜி எப் என்ற பிரமாண்ட வெற்றி படத்தை கொடுத்த பிரஷாந்த் நீல்-உடன் அஜித் கைக்கோர்க்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்,

இந்த காம்போ மட்டும் அமைந்தால் கண்டிப்பாக ரூ. 1000 கோடி வசூல் உறுதி என கூறப்படுகிறது.