நடிகர் அஜித் உடல் எடையை குறைத்தது இப்படி தானாம்!

விடாமுயற்சி
அஜித் குமார் – மகிழ் திருமேனி கூட்டணியில் விடாமுயற்சி திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கிய விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் 50 நாட்களுக்கு மேலாக அங்கு நடைபெற்றது.

அதன்பின்னர் சில நாட்கள் ஓய்வெடுப்பதற்காக படக்குழுவினர் சென்னை திரும்பினார்கள். இதனை அடுத்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது.

ஸ்லிம்மாக காரணம்
இந்நிலையில், விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித் உடல் எடையை குறைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை 15 கிலோ எடை குறைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது அஜித் எப்படி உடல் எடையை சீக்கிரமாக குறைத்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதில், பெரும்பாலும் அசைவ உணவுகளை சாப்பிட்டு வந்த அஜித் குமார், உடல் எடையை குறைக்க தற்போது சைவ உணவிற்கு மாறியுள்ளாராம். இதனால் தான் அவரால் உடல் எடையை இப்படி குறைக்க முடிந்தது என்று சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.