நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்

நடிகை நயன்தாரா
ஒரு பக்கம் கதாநாயகியாகவும், மறுபக்கம் சோலோ ஹீரோயினாகவும் கலக்கி வருகிறார் நடிகை நயன்தாரா.

அப்படி நயன் சோலோ ஹீரோயினாக கலக்கியுள்ள அன்னபூரணி திரைப்படம் இந்த வாரம் வெளிவந்துள்ளது.

நிலேஷ் கிருஷ்ணாவின் அறிமுக இயக்கத்தில் உருவான இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சத்யராஜ், ஜெய், கே.எஸ். ரவிக்குமார், கார்த்திக் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்.

மக்கள் மத்தியில் டீசண்டான வரவேற்பை பெற்றுள்ள அன்னபூரணி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நயன்தாரா 75வது படமான அன்னபூரணி முதல் நாள் மட்டுமே உலகளவில் ரூ. 80 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த வார இறுதிக்குள் மக்களிடம் இருந்து இன்னும் அதிக வரவேற்பு இப்படத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.