மருத்துவமனையில் இருந்து வெளியான விஜயகாந்த்தின் போட்டோ!

நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் இருக்கு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி ரசிகர்களை சோகம் அடைய வைத்து இருக்கிறது.

பல பிரபலங்களும் நேரில் சென்று விஜயகாந்தை நலம் விசாரித்து வருகின்றனர். அதனால் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது.

விஜயகாந்த்
இந்நிலையில் தற்போது நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி இருக்கிறது.

விஜயகாந்த் வென்டிலேட்டரில் இருக்கிறார் என வதந்தி பரவிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தான் இந்த புகைப்படங்களை அவரது மனைவி வெளியிட்டு இருக்கிறார்.

வீண் வதந்திகளை பரப்பாதீங்க என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.