மீண்டும் உயரும் அஜித்தின் சம்பளம்

விடாமுயற்சி
அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த துணிவு மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி.

இப்படத்தை மகிழ் திருமணி இயக்கி வர லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ், பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

ஏகே 63
இப்படத்திற்கு பின் அஜித் நடிக்கவுள்ள ஏகே 63 படம் குறித்து தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகிறார் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

அதிகரித்த சம்பளம்
இந்நிலையில், இப்படத்திற்காக முதலில் அஜித்துக்கு ரூ. 162 கோடி சம்பளம் என கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித்துக்கு ரூ. 165 கோடி சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது.