ரஜினியின் மனைவிக்கு நீதிமன்ற உத்தரவு!

லதா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய காதல் மனைவி லதா என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இந்நிலையில், லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கோச்சடையான்.

மோசடி வழக்கு
இப்படத்தின் மோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் லதா ரஜினிகாந்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வருகிற ஜனவரி 6ஆம் தேதி அல்லது அதற்குமுன் பெங்களூரு கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.