கடுமையான விமர்சனங்களை கடந்து மீண்டும் அதே இயக்குனருடன் கூட்டணி சேரும் விஜய்

பீஸ்ட்
விஜய் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்தது பீஸ்ட். அப்படம் சோலோவாக ரிலீஸ் ஆகியிருந்தால் கூட இவ்வளவு விமர்சனம் வந்திருக்காது.

கே.ஜி.எஃப் 2 Vs பீஸ்ட் என ரசிகர்கள் ஒரு பக்கம் சமூக வலைத்தளத்தில் மோதலில் ஈடுபட, படமும் கொஞ்சம் சுமாராக இருந்ததால், இதுதாண்டா நேரம் என்றும் பீஸ்ட் படத்தை மற்ற நடிகர்களின் ரசிகர்களும் வெச்சு செய்தனர்.

விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தினால் சற்று ஏமாற்றமடைந்து இருந்தாலும் கூட, நடிகர் விஜய்க்கு படம் பிடித்ததாக இயக்குனர் நெல்சன் பல இடங்களில் கூறினார். அதே போல் மீண்டும் இதே கூட்டணி அமையப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

பீஸ்ட் படத்திற்கு பின் ஜெயிலர் எனும் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக யாருடன் கைகோர்க்க போகிறார் என இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

மீண்டும் கூட்டணி
இந்நிலையில், மீண்டும் தளபதி விஜய் – நெல்சன் – சன் பிச்சர்ஸ் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68 படத்தை முடித்துவிட்டு, விஜய்யின் அடுத்த படம் சன் பிச்சர்ஸ் நிறுவனத்துடன் தான் என கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.