உதட்டோடு உதடு முத்தக்காட்சி.. அந்த நடிகரை பார்த்து அச்சப்பட்ட நடிகை சினேகா

நடிகை சினேகா
‘என்னவளே’ படம் தான் நடிகை சினேகாவின் முதல் தமிழ் திரைப்படமாகும். இதன்பின் ஆனந்தம், ஜனா, வசீகரா, வசூல் ராஜா MBBS என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க துவங்கினார்.

இந்நிலையில், நடிகை சினேகா ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகும்போது, குறிப்பாக ஒரு விஷயத்தினால் அச்சப்பட்டது குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

கமல் ஹாசன் நடிப்பில் சரண் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வசூல் ராஜா MBBS. இது ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றார் போல் நகைச்சுவையை அழகாக வடிவமைத்திருப்பார்கள்.

உதட்டோடு உதடு முத்தக்காட்சி
இப்படத்தில் கமலுடன் இணைந்து முதல் முறையாக சினேகா நடித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் கமிட் ஆகும் போது நடிகை சினேகா கோரிக்கை ஒன்றை வைத்தாராம். படத்தில் கமலுடன் உதட்டோடு உதடு முத்தக்காட்சி இருக்க கூடாது என கூறினாராம்.

கமலின் பல படங்களில் நடிகைகளுடன் உதட்டோடு உதடு முத்தக்காட்சி வருவதால் அச்சப்பட்ட சினேகா, வசூல் ராஜா MBBS படத்தில் இப்படியொரு விஷயத்தை முன் வைத்து கமிட் ஆகியுள்ளார் என அப்படம் வெளிவந்த சமயத்தில் கூறப்பட்டதாம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது