கணேஷ் வெங்கட்ராமன்
ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன்.
முதல் படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் அடுத்தடுத்து தீயா வேலை செய்யனும் குமாரு, கோ, பனித்துளி, உன்னைப்போல் ஒருவன், விஜய்யின் வாரிசு என தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
இடையில் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு 3வது இடத்தை பிடித்தார். இவர் தொகுப்பாளினியும், நடிகையுமான நிஷாவை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், அவ்வப்போது குழந்தைகளின் புகைப்படங்களை அவர்கள் வெளியிடுவது வழக்கம்.
புதிய சீரியல்
துவந்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தற்போது சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகப் போகும் நினைத்தேன் வந்தாய் தொடரில் தான் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்க இருக்கிறாராம்.
View this post on Instagram