குடும்பத்தினரால் ஒதுக்கப்படும் பாக்கியாவிற்கு ஆதரவு கொடுக்கும் ராதிகா

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா மற்றும் ராதிகா மீண்டும் பழைய தோழிகளாக மாறும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.

பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்

கஷ்டப்பட்டு முன்னேறி வந்த பாக்கியாவை பழிதீர்க்க நினைத்த ராதிகா அவரிடம் கேன்டீன் ஆர்டரையும் பறித்துள்ளார். தொழிலிலும் அடியை சந்தித்த பாக்கியா, குடும்பத்திலும் அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வருகின்றார்.

தற்போது செழியன் மாலினி விவகாரம் ஜெனி மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்த நிலையில், ஜெனி அவரது தாய் வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.

இதற்கு காரணம் பாக்கியா தான் என்று குடும்பத்தினர் அவரை குற்றம் சாட்டி ஒதுக்கியுள்ளனர். இத்தருணத்தில் ராதிகா அதிரடியாக எண்ட்ரி கொடுத்து பாக்கியாவின் பழைய தோழியாக மாறியுள்ளார்.

பாக்கியாவிற்கு ஆதரவாக பேசியது மட்டுமின்றி, பாக்கியாவிற்கு டீ போட்டு கொடுத்து தனது பாசத்தை காட்டியுள்ளது கதையின் போக்கையே மாற்றியுள்ளது.