யாழில் பெரும் எடுப்பில் போதை விருந்து!

யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 4ஆம் திகதி மாபெரும் போதை விருந்து கொண்டாட்டம் ஒன்று இடம்பெற்ற விடயம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விருந்துக்கு கொழும்பை சேர்ந்த நிறுவனம் ஒன்றின் பெயரில் சிலர் , சமூக வலைத்தளங்களின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தெற்கில் அடக்கும் பொலிஸார்
அதன் அடிப்படையில் அன்றைய தினம் அங்கு வந்த சிலர் தாம் கொண்டு வந்திருந்த கஞ்சா , ஐஸ் போன்ற போதை பொருளையும் நுகர தொடங்கியுள்ளனர்.

எனினும் ஹோட்டலில் மதுபானம் மாத்திரமே வழங்க பட்டதாகவும், ஆனாலும் அங்கு வந்த பலரும் தம் வசம் போதைப்பொருளை வைத்திருந்ததாக விருந்தில் கலந்து கொண்ட சிலர் தெரிவித்தனர்.
அதேவேளை தென்பகுதிகளில் சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான போதை விருந்துக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு எதிராகவும் , விருந்து கலந்து கொண்டவர்களுக்கு எதிராகவும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வடக்கில், இவ்வாறான விருந்து இடம்பெற்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.