அமெரிக்க ஆய்வாளர்களின் புதிய கண்டுப்பிடிப்பு

பன்றிகளின் ரத்தத்திலுள்ள பிளாஸ்மாக்கள் மூலம் எலிகளின் வயதைக் குறைக்கும் ஆய்வுகளை அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர் .

இதுத் தொடர்பில் லால் ஏஞ்சலஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பன்றிகளின் இரத்தத்திலிருந்து பெறப்படும் இளம் பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களைக் கொண்டு வயதான எலிகள் மீது E5 எனப்படும் வயது எதிர்ப்பு சிகிச்சையளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர் .

இந்த சிகிச்சை எலிகள் மீது 70 விழுக்காடு வெற்றி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சிகிச்சையின் போது எலியின் மரபணுவில் நம்பமுடியாத அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தி வயதைப் பாதியாகக் குறைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த சோதனை மனிதர்கள் மீது நடாத்தப்பட்டால் 80 வயது முதியவரை 26 வயதுடைய முதியவராக மாற்ற முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.