சீரியல் நடிகை நிஷா – கணேஷ் ஜோடிக்கு இரண்டாம் குழந்தை பிறந்தாச்சு

சின்னத்திரை நடிகை நிஷா மற்றும் நடிகர் கணேஷ் வெங்கடராம் இருவரும் 2015ல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நிஷா அதற்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

நிஷா – கணேஷ் ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை 2019ல் பிறந்தது. அவருக்கு சமைரா என பெயர்சூட்டினர்.

இரண்டாம் குழந்தை
இந்நிலையில் இரண்டாவது முறையாக நிஷா கர்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தனர்.

இன்று காலை நிஷாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாய், சேய் இருவரும் இருப்பதாக நலமாக இருப்பதாக கணேஷ் தெரிவித்து இருக்கிறார்.

புகைப்படங்கள் இதோ..