500கோடி பஜ்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்ட படம்

சூர்யா
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வரலாற்று பகுதியும் இருப்பதாகவும், அதை பிரம்மாண்டமாக தயாரித்து வருவதாகவும் படக்குழு கூறி இருக்கிறது.

இந்நிலையில் தற்போது சூர்யா ஹிந்தியில் பிரம்மாண்டவரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கர்ணா
மகாபாரத கதையை மையப்படுத்தி கர்ணா என்ற படத்தை Rakeysh Omprakash Mehra இயக்க இருக்கிறார். அதில் தான் சூர்யா ஒப்பந்தம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் 500 கோடி ரூபாய் படஜெட்டில் உருவாக இருக்கிறதாம். சூர்யா தற்போது கைவசம் இருக்கும் வாடிவாசல், சுதா கொங்கரா படம் ஆகியவற்றை முடித்தபிறகு இந்த படத்தில் நடிப்பார் என தெரிகிறது.