லாபத்தில் பங்கு கேட்ட தளபதி விஜய்.. பதறிப்போன தயாரிப்பாளர்

தளபதி 68
விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் முதல் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68. ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரியங்கா மோகன், ஜோதிகா, மாதவன் மற்றும் பிரபு தேவா உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

தளபதி 68 படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. விஜய் தற்போது நடித்து முடித்துள்ள லியோ படத்திற்கு ரூ. 125 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். அதிலிருந்து ரூ. 75 கோடி அதிகமாக எப்படி ஏ ஜி எஸ் நிறுவனம் விஜய்க்கு தந்தார்கள் என அனைவரின் மத்தியிலும் கேள்வி எழுந்தது.

லாபத்தில் பங்கு
முதலில் இப்படத்தை பற்றிய பேச்சில் நடிகர் விஜய் எனக்கு ரூ. 100 கோடி சம்பளம் கொடுங்க, மேலும் இப்படத்தில் வரும் லாபத்தில் பங்கு வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் தயாரிப்பாளர் பதறிப்போய் இருக்கிறார்கள்.

இந்த நிலைமையில் தான் லாபத்தில் பங்கு கொடுப்பது என்பது முடியாத காரியம் என்று எண்ணி, ரூ. 200 கோடி சம்பளம் ஓகே வா என விஜய்க்கு ஆஃபர் கொடுத்துள்ளனர். அதற்க்கு விஜய் சரி என கூறியுள்ளார். இப்படி தான் தளபதி 68 படத்திற்கு விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.