ரோலக்ஸ் படத்தை அறிவித்த சூர்யா! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சூர்யா
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் கிளைமாக்ஸில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தோன்றி மிரட்டி இருப்பார் சூர்யா. அதற்கு ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

அதனால் ரோலக்ஸுக்காக ஒரு தனி படத்தை லோகேஷ் எப்போது இயக்குவார் என ரசிகர்கள் காத்திருந்தனர். அது பற்றி தற்போது சூர்யாவே ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

ரோலக்ஸ்
லோகேஷ் கனகராஜிடம் இரும்புகை மாயாவி மற்றும் ரோலக்ஸ் ஆகிய கதைகளை கேட்டு இருப்பதாகவும், முதலில் ரோலக்ஸ் படத்தில் தான் நடிப்பேன் என அவர் கூறி இருக்கிறார்.

தற்போது கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து சூர்யா 43 படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் சூர்யா தெரிவித்து இருக்கிறார்.