எப்போதும் அழகாக இருக்க

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி 30 வயதிற்குப் பிறகு உடல் உறுப்புகளின் செயல்பாட்டின் வேகம் குறைய ஆரம்பித்து முதுமையின் தாக்கம் மெதுவாகத் தோன்றத் தொடங்குகிறது.

இதன் அறிகுறியாக தோலில் சுருக்கங்கள், கண் பார்வை மங்குதல், மூட்டுகளில் வலி, காது கேளாஐ போன்ற பிரச்சனைகள் மட்டுமின்றி ஒரு வயதிற்குப் பிறகு இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ், இரத்த சோகை, தைராய்டு போன்ற தீவிர நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது.

தொழில், குடும்பம், குழந்தைகள் மற்றும் குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் இந்த நேரத்தில் கவனிக்க வேண்டியிருக்கும் நிலையில் முதுமை நம்மை அண்டாமல் இருக்க உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.

இந்நிலையில் முதுமையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள சில உணவுகளை சாப்பிடுவது சிறந்தது. கொலாஜன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொண்டு, என்றும் இளமையாக இருக்கலாம்.

சிலர் முதுமையில் இருந்து தப்ப கொலாஜன் சப்ளிமெண்ட் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அதனை தவிர்க்க இயற்கையில் கொலாஜனை உற்பத்தி செய்யும் உணவுகளை எடுத்துக் கொள்வது சிறப்பு.

சருமத்தின் தோற்றம் மற்றும் இளமை ஆகியவற்றில் உணவு ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. கொலாஜன் நிறைந்த உணவுகள் அல்லது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்பது சருமத்தை இறுக்கமாக்கி சுருக்கங்களை போக்கி இளமையாக வைத்திருக்கும்.

குடைமிளகாய்

குடைமிளகாயில் காணப்படும் கேப்சைசின் எனப்படும் அழற்சி எதிர்ப்பு கலவை சருமம் முதுமை அடைவதை எதிர்த்துப் போராட உதவுகிறது.

குடை இதில் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடண்டுகள், அமினோ அமினோ மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன.

பச்சை இலை காய்கறிகள்

உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ள கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள் சூப்பர்ஃபுட் வகையை சேர்ந்தவை.

இதில் உள்ள குளோரோபில், கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதை பல ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன.

மீன் உணவுகள்

உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவும் அமினோ அமிலங்கள், துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற அத்தியாவசிய தாதுக்களின் சக்திவாய்ந்த ஆதாரமாக மீன் உள்ளது.

பல வகையான பிற மீன்களிலும் சில வகை இறைச்சிகளிலும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பதால் முதுமையை எதிர்த்து போராட உதவும்.

மீன் உணவுகள் மூலம் ஆரோக்கியமான இளமையான சருமத்தை பராமரிக்கலாம்.

சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை மற்றும் பிற சிட்ரஸ் பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இவை உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் நச்சுகளை வெளியேற்றி, நல்ல ஊட்டமான சருமத்தை பெறவும் உதவுகின்றன.

சிட்ரிக் பழங்கள் தோல் அழற்சியை எதிர்த்து போராடவும் உதவுகின்றன.