பல கோடி ரூபா பெறுமதியிலான வீட்டை விற்று குழந்தைகளுடன் நடுத்தெருவிற்கு வந்த பிரபல நடிகை!

சாந்தி வில்லியம்ஸ்
வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை நடிகைகளுக்கு தான் இப்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.

எனவே பல கலைஞர்கள் முதலில் தங்களது பயணத்தை சீரியல் பக்கமே முதலில் தொடங்க விரும்புகிறார்கள். நாயகிகளை தாண்டி வில்லி ரோலில் நடிப்பவர்களுக்கும் மக்களிடம் நல்ல ரீச் கிடைக்கிறது.

அப்படி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பார்வதி வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் சாந்தி வில்லியம்ஸ்.

12 வயதில் நடிக்க தொடங்கிய இவர் 1999ம் ஆண்டில் இருந்து சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார். மெட்டி ஒலி, சித்தி, அண்ணாமலை, பூவே உனக்காக, பாண்டியன் ஸ்டோர்ஸ் என கலக்கி வருகிறார்.

குடும்பம்
1979ம் ஆண்டு மலையாள கேமராமேன் ஜெ வில்லியம்ஸை திருமணம் செய்த இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். சாந்தி வில்லியம்ஸ் ஒரு பேட்டியில், எனது கணவருக்கு கார்கள் வாங்குவது என்றால் மிகவும் பிடிக்கும், குழந்தைகளாகவே பார்ப்பார்.

ஏகப்பட்ட கார்கள் இருந்தது, இவர் எங்கு போக வேண்டும் என சொல்கிறாரோ அந்த திசையில் இருக்கும் காரை எடுத்து டிரைவர் காத்திருப்பார். 1996 க்கு முன்பு படங்களை எடுத்து நஷ்டமாகிவிட்டது.

இதனால் கே.கே.நகரில் எனது சொந்த வீட்டை இழந்து குழந்தைகளுடன் நானும் அவரும் நடுரோட்டில் நின்றோம். அன்று நாங்கள் இழந்த வீட்டின் இன்றைய மதிப்பு ரூ 100 கோடி.

பழைய நிலைமையை அடைய கடுமையாக கஷ்டப்பட்டு உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.