சிம்பு மீது புகார் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்

சிம்பு பத்து தல படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 48 படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் கூட இன்னும் தொடங்காத நிலையில் தற்போது ஒரு சிக்கல் வந்திருக்கிறது.

புகார் கொடுத்த தயாரிப்பாளர்
சிம்பு பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு தொடர்ந்து மூன்று படங்கள் நடித்து கொடுக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறாராம். ஆனால் தற்போது திடீரென கமல் தயாரிப்பில் படம் நடிக்க சென்றுவிட்டார் என ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து இருக்கிறாராம்.

இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிம்பு இப்படி பஞ்சாயத்தில் சிக்குவதும் இது முதல் முறை அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் அவர் இதை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.