நடிகை சாய்பல்லவியின் நீளமான கூந்தலுக்கு என்ன காரணம் தெரியுமா?

சாய் பல்லவி
தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்றதன் மூலம் சினிமாவில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் நடிகை சாய் பல்லவி.

நடிப்பு மட்டும் இல்லாமல் அட்டகாசமான நடனத்தின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.

முகத்தில் பருக்கள் இருந்தாலும் மேக்கப் என செயற்கை பொருள்கள் இல்லாமல் இயற்கையாக தனது அழகை பாதுகாத்து வருகிறார். சாய் பல்லவியிடன் நீளமான முடிவுக்கு இளம் ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம்.

இவ்வளவு அழகான நீளமான முடிக்கு காரணம் ஒரு விஷயம் உள்ளது.

பயன்படுத்தும் பொருள்
சாய் பல்லவி எப்போதும் செயற்கை அழகு பொருட்களை பயன்படுத்துவதே இல்லையாம்.

சருமத்தைப் பராமரிக்க சாய் பல்லவி உணவில் கவனம் செலுத்துகிறார். காய்கறிகள் பழங்களை எப்போதும் உணவில் சேர்த்து கொள்வாராம்.

ஆரோக்கியமான உணவு முறை பொலிவான சருமத்தை தரும் என்கிறார். தனது கூந்தலை பராமரிக்க சாய் பல்லவி கற்றாழையை தான் பயன்படுத்துகிறாராம்.