வேலையில்லா பட்டதாரி படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

வேலையில்லா பட்டதாரி
வேள்ராஜ் இயக்கத்தில் தனுஷ் மற்றும் அமலா பால் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இது தனுஷின் 25வது திரைப்படமாகும்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சமுத்திரக்கனி, விவேக், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை தனுஷின் Wunderbar Films நிறுவனம் தயாரித்திருந்தார். எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், தனுஷின் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் உலகளவில் ரூ. 50 – 55 கோடி வரை வசூல் செய்து இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.