வயதானவர் ஒய்வு இல்லங்கள்… இதுவும் ஒருவித முதலீடு தான்…

தற்போதைய காலகட்டத்தில் முதியவர்கள் ஓய்வு பெற்ற பின் அமைதியான சூழலில் பாதுகாப்புடன் வாழ்வதற்கு உகந்த இடம் வயதானவர் ஒய்வு இல்லம்.

பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அயல்நாட்டில் வேலை பார்ப்பதால் இங்கு பார்த்துக் கொள்வதற்கு ஆள் இல்லாத காரணத்தினாலும் தனிக்குடுத்தனங்கள் பெருகி உள்ள நிலையில் இடவசதி இன்மை, சௌகரியங்கள் இன்மை இது போன்ற பல தவிர்க்க முடியாத காரணத்தால் பெற்றோர்களை முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கின்றனர்.

பெரியவர்களும் தங்களுக்கு உள்ள சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க முடியாமலும் தனக்கென்று ஒரு தனிமை தேவைப்படுவதாலும் தங்களது தனி உரிமைக்காகவும் சிலர் அமைதியான இது போன்ற சூழலில் வாழ விரும்புகின்றனர்.

முதியவர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஓடி கொண்டே இருந்த சூழலில் தங்களது வயதான காலத்தில் அமைதியாகவும் நிம்மதியாகவும் பாதுகாப்புடனும் வாழும் சூழலை விரும்புகின்றனர். இவை அனைத்தும் இது போன்ற ஓய்வு இல்லங்கள் நிறைவேற்றுகின்றது.

தற்போது பல கட்டட அமைப்புகள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் முதியவர்களுக்கு என தனித்தனியே வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. அவைகள் முதியவர்களின் வசதிக்கேற்ற மாதிரி முதியவர்களுக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது. இதில் பலதரப்பட்ட குடும்பங்களை சார்ந்த ஓய்வு பெற்ற முதியவர்கள் ஒன்றாக வசிக்கிறார்கள்.

முதியோர் இல்லங்கள் போன்றே இவ்வமைப்புகள் இருக்கும். ஆனால் தனித்தனி சொந்த வீடுகள். முதியவர்கள் வயதான பின்பு ஓய்வு காலத்தில் அவரவர் சொந்த வீட்டில் சுதந்திரமாக பாதுகாப்பாக மகிழ்ச்சியுடன் எந்த தொந்தரவும் இல்லாமல் வாழும் வண்ணம் இக்கட்டட அமைப்புகள் அமைகின்றன. அவரவர் வசதிகளுக்கு ஏற்ப அவர்களின் பிள்ளைகளோ வயதானவர்களே கூட தங்களது ஓய்வு ஊதிய பணத்தை அதில் முதலீடு செய்து தனக்கென சொந்தம் ஆக்கிக் கொள்கிறார்கள்.

அங்குள்ள அனைத்து வீடுகளிலுமே முதியவர்கள் இருப்பதால் அதுவயதானவர்இல்லம் போன்ற ஒரு அமைப்பையே உருவாக்கி தருகிறது. அங்கு மருத்துவ வசதிகள் யோகாசன பயிற்சிகள் பூங்காக்கள் நடைபாதை மேடைகள் என பல வசதிகளும் அமைக்கப்படுகிறது. வயதானவர்கள் அவரவர் வீடுகளில் வசிப்பது போன்றே எந்த தொந்தரவுகளும் இல்லாமல் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் சுதந்திரமாகவும் அமைதியான பாதுகாப்பான முறையிலும் வீட்டு சூழலை உருவாக்கி தருகிறார்கள்.

வயதானவர்களின் தேவைகளுக்கும் விருப்பத்திற்கு ஏற்பவும் கட்ட மைப்புகள் அமைக்கப்படுகின்றன. வீட்டில் குளியலறை வசதி படுக்கையறை சமையலறை என ஒவ்வொரு அறையிலும் வயதானவர்களின் வசதிகளுக்கு ஏற்ப கட்டட அமைப்புகள் உள்ளன. வயதானவர்களை கவனித்துக் கொள்ள பணியாளர்களும் அங்கே அமர்த்தப்படுகிறார்கள்.

24 மணி நேரமும் மருத்துவ வசதிகளும் குடிநீர் வசதி என பல வசதிகளுடன் கட்டப்படுகிறது. வயதானவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் மூச்சுப் பயிற்சிகள் என அனைத்து பயிற்சிகளும் உள்ளேயே வழங்கப்படுகிறது. விளையாட்டுக் கூடங்கள் தோட்டங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய கட்டமைப்பாகும். வயதானவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வண்ணம் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

அதற்கான கட்டட அமைப்புகளும் அதற்குள்ளேயே உருவாக்கப்படுகிறது. பெரிய அடுக்குமாடி கட்டடங்களில் அனைவருக்கும் பொதுவான பூங்காக்கள் நடைபாதைகள் பயிற்சி மையங்கள் விளையாட்டு பொழுது போக்கு கூடங்கள் கோயில்கள் என்ற அனைத்தும் உள்ளடங்கிய கட்டட அமைப்புகள் போன்ற அமைப்பை ஒத்தவை தான் இந்த முதியோர் இல்ல கட்டட அமைப்புகளும் சிறந்த தொழில்நுட்ப கட்டட வல்லுனர்களால் பல அதிநவீன வசதிகளுடன் முதியவர்களின் சௌகரியங்களுக்கு ஏற்ப கட்டடங்கள் வடிவமைக்கப்படுகிறது.

அவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி கட்டடங்கள் கட்டப்படுகிறது. அனைத்து வசதிகளும் முதியோர் இல்லத்தில் இருந்தாலும் அது நமக்கு என சொந்தமான இடம் இல்லை என்பது பலருக்கும் மன வருத்தத்தை உருவாக்குவதால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்கும் வண்ணம் இது மாதிரி வயதானவர் ஓய்வு இல்லங்கள் சொந்த வீடுகளில் வாழும் சூழல் மற்றும் மன அமைதியை தருகிறது. மன உற்சாகத்தை தருவதுடன் அயல்நாடுகளில் வேலை பார்க்கும் தங்களது பிள்ளைகள் பேரன் பேத்திகள் என்று வந்தாலும் தங்குவதற்கு வசதியாக இருக்கும்.

சொந்த வீடு என்பதால் தங்குவதற்கு தொந்தரவு இல்லாத சூழலையும் உருவாக்கி தரும். அவர்களுக்கும் தாய் தந்தையருடன் சொந்த வீட்டிலேயே இருக்கலாம். பேரன் பேத்திகளுக்கும் இது என் தாத்தா பாட்டி வீடு என்று சுதந்திரமாக சுத்தி திரிவதற்கும் வசதியாக இருக்கும். வயதானவர்கள் காலத்திற்குப் பின்பு அவர்களது பிள்ளைகள் இதே மாதிரி மகிழ்ச்சியாக தங்களது வயதான காலத்தை கழிப்பதற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

அவர்களது மகன் குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள் என்று பரம்பரையாக சொந்த வீட்டில் வசிக்கலாம். இதுவும் சொந்த வீடு வாங்கி சொத்து சேர்ப்பதற்கான ஒரு அமைப்பு தான். ஆனால் வயதானவர்கள் ஒன்று கூடி வாழும் ஒரு சூழலில் சொந்தமாக சுதந்திரமாக அமைதியாக வாழும் ஒரு அமைப்பு. சம்பாதிக்கும் நாட்களிலேயே இது போன்ற வீடுகளை வாங்கி வைத்துக் கொள்வது பிற்காலத்தில் நமக்கும் நமது சந்ததியினருக்கும் உதவியாக இருக்கும். இதுவும் ஒருவித முதலீடு தான். பாதுகாப்பான முதலீடு. சொத்து சேர்ப்பதற்கான நவீன வருங்கால வயதானவர்களுக்கான வசதியான முதலீடு.