27 நாடுகளில் சாதனை படைத்த துணிவு

துணிவு
அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கத்திருந்தார்.

கடந்த பொங்கலுக்கு வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ. 223 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. திரையரங்கை தொடர்ந்து இப்படம் ஓடிடியில் வெளிவந்தது.

புதிய சாதனை
இந்நிலையில், ஓடிடியில் இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் செய்யாத சாதனையை துணிவு திரைப்படம் செய்துள்ளது.

ஓடிடியில் வெளிவந்த 24 மணி நேரத்தில் 27 நாடுகளில் டாப் 10ல் இடத்தை பிடித்துள்ளது.

இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் இப்படியொரு சாதனை செய்யவில்லை என கூறி ரசிகர்களை இந்த விஷயத்தை கொண்டாடி வருகிறார்கள்.