யாழில் திடீரென உயிரிழந்த இளம் அரச உத்தியோகஸ்தர்

யாழ் – கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபையின் தலைமைச் செயலக திறைசேரியில் பணியாற்றிய அரச உத்தியோகஸ்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முகாமைத்துவ உத்தியோகத்தராக பணியாற்றிய 36 வயதான ஜெயேந்திரன் நிஜந்தன் என்பவரே திடீரென ஏற்பட்ட காய்ச்சலால் மரணமடைந்துள்ளார்.

வழியில் மரணம்
குறித்த உத்தியோகஸ்தர் காய்ச்சல் காரணமாக கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்ற போது அங்கு அவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரியவருகின்றது.