மாற்றான் படத்திற்கு சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக சூர்யா 42 திரைப்படம் உருவாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

சூர்யாவின் திரை வாழ்க்கையில் பெரிதும் எதிர்பார்த்து சறுக்கலை சந்தித்த திரைப்படம் தான் மாற்றான். இப்படத்தில் ஒட்டி பிறந்த இரட்டையாளராக நடித்து அசத்திருந்தார் சூர்யா.

சம்பளம்
இதனாலேயே இப்படத்தின் மீதி எதிர்பார்ப்பு மாபெரும் அளவில் இருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை.

ஆனால், தற்போது இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் நடிக்க ரூ. 18 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளாராம் நடிகர் சூர்யா.