இரண்டாவது திருமணம் குறித்து நடிகை மீனா என்ன கூறியுள்ளார் தெரியுமா?

நடிகை மீனா
தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை மீனா.

தமிழ், தெலுங்கு, மலையாள என பல மொழிகளில் படங்கள் நடித்திருக்கும் மீனா நாயகியாக மார்க்கெட் குறைந்ததும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது, அண்ணி போன்ற வேடங்களில் நடிப்பதுமாக இருக்கிறார்.

கடைசியாக அவரது நடிப்பில் மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தில் நடித்திருந்தார்.

இரண்டாவது திருமணம்
படங்கள் நடித்துக் கொண்டு குடும்பத்துடனும் சந்தோஷமாக இருந்த மீனா வாழ்க்கையில் கடந்த வருடம் சோகமான விஷயம் நடந்தது, அதாவது அவரது கணவர் வித்யாசாகர் உயிரிழந்தார்.

கணவரின் உயிரிழப்பில் இருந்து இன்னமும் வெளியே வராத நடிகை மீனாவிற்கு அவரது தோழிகள் தான் துணையாக உள்ளனர்.

இந்த நிலையில் தான் நடிகை மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்து தகவல் வந்தது. இதுகுறித்து ஒரு பேட்டியில் மீனா பேசும்போது, எனது கணவர் இல்லை என்பதையே இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதற்குள் இப்படியெல்லாம் எப்படி செய்திகள் பரவுகிறது என்பது எனக்கு தெரியவில்லை.

இப்போதைக்கு நல்ல கதைகள் தேர்வு செய்து நடிப்பதும், எனது மகள் நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவதும் தான் எனக்கு முக்கியமான விஷயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.