திடீரென திருமணம் செய்து கொண்ட ரோஜா பட நடிகை

ரோஜா
சன் டிவியின் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலம் அடைந்தவர் பிரியங்கா நல்காரி. அந்த தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில் தற்போது அவர் ஜீ தமிழில் சீதா ராமன் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

ஆந்திராவை சேர்ந்த பிரியங்கா நல்காரிக்கு ரோஜா சீரியல் மூலமாக மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது.

திடீர் திருமணம்
இந்நிலையில் தற்போது பிரியங்கா நல்காரி தனது காதலரை மலேசியாவில் இருக்கு முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பல சிக்கல்களை தாண்டி இந்த திருமணம் நடந்து முடிந்திருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

ராகுல் வர்மா என்ற தொழிலதிபரை தான் பிரியங்கா நல்காரி திருமணம் செய்து இருக்கிறார். புகைப்படங்கள் இதோ..