கோவை குணாவின் மரணம் குறித்து பேசிய நடிகர்

பிரபல நகைச்சுவை நடிகர் கோவை குணா மரணத்திற்கு பின் மறைந்திருக்கும் விடயங்கள் குறித்து நடிகர் நடிகர் மதன்பாப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவரின் முயற்சி வியக்கத்தக்கது
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய “அசத்தப் போவது யாரு?” என்ற நிகழ்ச்சியில் பிரபலமானவர் தான் கோவை குணா.

இவர் தமிழ் சினிமாவில் பிரபல்யமான கதாநாயகரின் குரல்களில் பேசி ரசிகர்கள் பலரை தன் பக்கம் இழுத்து வைத்திருந்தார்.

இந்த நிலையில், சமிபத்தில் தினங்களுக்கு முன்னர் கோவை குணா இயற்கை மரணம் அடைந்துள்ளார். இவரின் இறப்பின் பின்னர் அவர் குறித்து பல செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதன்படி, குணா பங்குபற்றிய ஷோக்களில் எல்லாம் நடுவராக இருந்த நடிகர் மதன்பாப் அவர் குறித்து பல உண்மை விடயங்களை பகிர்ந்துள்ளார்.


குணாவின் மரணத்திற்கு இது தான் காரணம்
அதில், “குணா பற்றி எனக்கு நல்லா தெரியும். இவர் ஷோக்களில் பார்க்கும் போது கோட் சூட் போட்டு கொண்டு கம்பீரமாக இருப்பார். மேலும் குணா ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ் என்பதால் கவுண்டமணியை அப்படியே ஒப்பிட்டு நடிக்கக்கூடியவர்.

இவரின் திறமைக்கு இன்று வரை யாரும் இல்லை. இதனை தொடர்ந்து நான் தான் பரிந்துரை செய்து வெள்ளித்திரைக்குள் எடுத்தேன். ஆனால் இவர் எவ்வளவு உயரத்திற்கு போக முடியுமோ போ என்றேன்.

இவருக்கு கொஞ்சம் கெட்ட பழக்கங்கள் இருந்தது. இது அளவோடு இருந்திருந்தார் இன்று உயிருடன் இருந்திருப்பார். இல்லை என்று கூட என்னால் நம்ப முடியவில்லை. அவ்வளவு நம்பினேன் குணாவிற்கு ஒரு பழக்கம் இருக்கிறது நம்பியவர்களை ஒரு போதும் கை விட மாட்டார்.” என கூறியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “ இறக்கும் அளவிற்கு என்ன கெட்ட பழக்கம் செய்தார் இவர்” என கமண்ட் செய்து வருகிறார்கள்.