சுந்தரா ட்ராவல்ஸ் பட நடிகையின் உருக்கமான பேட்டி

நடிகர் முரளி நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா ட்ராவல்ஸ். இதில் கதாநாயகியாக ராதா நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

இதன் பின்னர் இவர் கேம், அடாவடி, காத்தவராயன் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை ராதா முன்னணி நடிகையாக வலம் வருவார் என்ற எதிர்பார்த்த நிலையில், சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்து வருகிறார்.

உருக்கம்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ராதா, ” நான் சுந்தரா ட்ராவல்ஸ் படத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் தான் நடித்தேன். 2012 -ம் ஆண்டின் போது நான் ஒருவரை காதலித்தேன். இதனால் தான் என்னுடைய வாழ்க்கை மோசமானது. நான் அன்புக்கு அடிமை ஆகிவிட்டேன்”.

“என்னுடைய அம்மா சினிமாவில் கவனம் செலுத்த சொன்னார். நானும் நல்ல பாசிட்டிவ்வான கதாபாத்திரத்தை நோக்கி காத்து கொண்டு இருந்தேன். தற்போது பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது” என்று உருக்கமாக கூறியுள்ளார்.