சிம்புவின் 48வது படத்தில் நாயகியாக நடிக்க இருபவர் யார் தெரியுமா?

நடிகர் சிம்பு
கொரோனா சமயத்தில் உடல் எடையை முற்றிலும் குறைத்து இப்போது ஆளே மாறியிருக்கிறார் சிம்பு. ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு, அடுத்து பத்து தல, அதற்கு அடுத்து சிம்பு 48 என பிஸியாகவே இருக்கிறார்.

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன் என பலர் நடிக்க உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது.

பட ரிலீஸிற்கு நெருங்கிவரும் நிலையில் படத்தின் டிரைலரும் வெளியாகிவிட்டது, ஆடியோ வெளியீட்டு விழாவும் படு மாஸாக நடந்துவிட்டது. அதில் சிம்புவின் எண்ட்ரீ, பேசிய விஷயங்கள் அனைத்துமே செம வைரலானது.

48வது படம்
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு அண்மையில் தான் வெளியானது.

இந்த நிலையில் தான் இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க வைக்க நடிகைகள் பூஜா ஹெட்ச், ராஷ்மிகா மந்தனா மற்றும் திஷா படானியை தேர்வு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களில் யார் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பார்கள் என தெரியவில்லை, ஆனால் இதில் யார் நடித்தாலும் சிம்புவுடன் நடிக்கும் முதல் படம் என்பதால் புதிய ஜோடியை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.