எமோஷ்னல் ஆன பதிவு ஒன்றை வெளியிட்ட அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா
விஜய் தொலைக்காட்சியில் வந்த பல நிகழ்ச்சிகள் மூலம் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் அதிகமானோர் உள்ளனர், அவர்களில் அறந்தாங்கி நிஷாவை கூறலாம்.

காமெடி நிகழ்ச்சியில் பெண் போட்டியாளராக கணவரின் உதவியோடு களமிறங்கி இப்போது பலருக்கும் ஒரு உதாரணமாக இருக்கிறார்.

சீரியல்கள், படங்கள் என பிஸியாக நடித்தாலும் தனியார் நிகழ்ச்சிகள் பல கலந்துகொண்டு வருகிறார். வெளிநாடுகளுக்கும் சென்று காமெடி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று மக்களின் பாராட்டுக்களை பெறுகிறார்.

எமோஷ்னல் பதிவு
தற்போது அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார். அதாவது அவரது மகள் படிக்கும் பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தனது மகளுக்கு பரிசு கொடுத்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, தனது மகளுக்கு கணவருடன் இணைந்து பரிசு கொடுத்த தருணத்தை எமோஷ்னலாக பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)