சிம்புவின் பத்து தல படத்திற்கு போட்டியாக களமிறங்கும் விஜய்சேதுபதி

விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வைரல் ஆனது.

சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து இருக்கும் இந்த படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது.

ரிலீஸ் தேதி
விடுதலை படத்தின் முதல் பாகம் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கின்றனர்.

மார்ச் 31ம் தேதி விடுதலை ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மார்ச் 30ம் தேதியில் தான் சிம்புவின் பத்து தல படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.