ட்ரம்புடன் பேச்சுவார்த்தைகளைத் தீவிரமாக்கும் ஆசிய நாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் பரஸ்பர கலந்துரையாடல்களை நடத்த, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளன.

முன்னதாக, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு 25 சதவீத வரியையும், லாவோஸ் மற்றும் மியன்மாருக்கு 40 சதவீத வரை வரியையும் விதித்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தலை வெளியிட்டார்.

இந்தநிலையில், பரஸ்பர நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், எதிர்வரும் சில வாரங்களில் வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தென் கொரியா குறிப்பிட்டுள்ளது.