வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (02.03.2023) இந்த தருணம் வரை (பிற்பகல் 1.30) வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சற்றுமுன் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதேவேளை இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்றைய தினம் காலை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மேலும் பப்புவா நியூகினியில் இன்றைய தினம் 4.6 மற்றும் 5.0 ரிக்டர் அளிவில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

இந்த சூழ்நிலையிலேயே இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.