சந்திரமுகி 2 கெட்டப்பில் வெளியான முதல் புகைப்படம்

சந்திரமுகி 2
பி.வாசு இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இப்படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்து வர, சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

மேலும் ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

கெட்டப் இதுதானா
இந்நிலையில், சந்திரமுகியாக நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி கெட்டப்புக்காக மேக்கப் போடும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..