ஜெர்மனியில் ஓய்வூதிய தொகையை அதிகரிக்க திட்டம்

ஜெர்மனியில் ஓய்வூதிய தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜெர்மனி அரசாங்கமானது எதிர்வரும் காலங்களில் ஓய்வு ஊதியம் பெறுகின்ற தொகையை அதிகரிப்பதற்காக புதிய ஒரு திட்டத்தை பற்றி ஆலோசிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதாவது பியுக ரெண்ட் என்று சொல்லப்படுகின்ற பிரஜைகளுக்கான ஓய்வுதிய திட்டத்தை எதிர்வரும் 19ஆம் திகதி ஆராயவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அரசாங்கமானது எதிர்காலத்தில் ஓய்வுதியம் பெறுபவர்கள் மேலதிகமான தொகையை பெறுவதற்கு ஊக்குவிப்பதற்கான அதி உயர் தொகையாக 290 யூரோ வழங்க உத்தேசித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளையில் சூழாகும் என்று சொல்லப்படுகின்ற மேலதிக கொடுப்பனவாக ஆககூடியது 146 யூரோ அரசாங்கத்தால் வழங்கப்பட உத்தேசித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இது பற்றி ஆராயவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அரசாங்கத்தில் ஊக்குவிப்பு திட்டம் அமுலில் இருக்கும் வேளையில் இவ்வாறான புதிய ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் இது பற்றி ஆராயவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.