ஒன்றாரியோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கோவிட் தொற்று பரவுகை தொடர்பில் ஒன்றாரியோ மாகாண மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

க்ராகென் (“Kraken”) எனப்படும் கோவிட் உப திரிபு தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாண பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் கிரன் மோர் இந்த விடயம் பற்றிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த உப திரிபின் பரவுகை வீரியம் மிக அதிகமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் நோய் தாக்கத்தின் அளவு குறைவாகவே காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

நோய் பரவுகை வேகம் மிக அதிகம் என்பதனால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் நோயினால் பாதிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் மூலம் ஆபத்துக்களை வரையறுத்துக் கொள்ள முடியும் எனவும் குறிப்பாக பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று காரணமாக கனடாவில் இதுவரையில் 50000 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.