சிங்கப்பூரில் புத்தாண்டு முதல் ஏற்பட்டுள்ள மாற்றம்!

சிங்கப்பூரில் புத்தாண்டு முதல் வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் குறைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

A பிரிவு – 1,600cc மற்றும் அதற்கும் குறைவான சிறிய கார்களுக்கான கட்டணம் 88,007 வெள்ளியில் இருந்து 80,000 வெள்ளியாகக் குறைந்தது.

B பிரிவு – பெரிய கார்களுக்கான கட்டணம் 108,006வெள்ளியாக இருந்தது.

இப்போது அது ஆறாயிரம் வெள்ளி குறைந்து 102,002 வெள்ளி. மேலும் மோட்டார் சைக்கிள் கட்டணம் 11,690 வெள்ளியில் இருந்து 10,890 வெள்ளிக்குக் குறைந்திருக்கிறது.