மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வந்த ரித்திகா

நடிகை ரித்திகா
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடர் மூலம் அறிமுகமானவர் ரித்திகா. அந்த தொடரில் வினோதினி என்ற சிறிய ரோலில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த அவர் இப்போது நடித்துவரும் தொடர் பாக்கியலட்சுமி.

விஜய் டிவியிலேயே டிஆர்பியில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

திருமணம் ஆகி குழந்தை பெற்று கணவரை இழந்த பெண்ணாக நடிக்கும் அமிர்தா கதாபாத்திரத்தை காதலிப்பவராக எழில் நடிக்கிறார். அடுத்து இவர்களின் காதல் டிராக் தான் கதையில் விறுவிறுப்பாக ஓடும் என தெரிகிறது.

குட் நியூஸ் சொன்ன ரித்திகா
நடிகை ரித்திகாவிற்கு கடந்த மாதம் வினு என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது. அனைவருமே அவருக்கு திருமண வாழ்த்து கூறினார்கள், சமீபத்தில் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றிருந்தார் ரித்திகா.

அங்கு எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார்.

தற்போது வீடியோவுடன் ஒரு குட் நியூஸ் கூறியுள்ளார், ஆனால் நீங்கள் நினைத்தது போல் கர்ப்பம் இல்லை.

அவர் மீண்டும் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வந்துவிட்டாராம், அவருக்கு பதில் வேறொருவர் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தளத்தில் அவர் வீடியோ வெளியிட ரசிகர்கள் மகிழ்ச்சி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)