தொகுப்பாளினி திவ்யதர்ஷினி
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினிகள் என்று நினைத்தாலே முதலில் நியாபகம் வருவது திவ்யதர்ஷினி தான். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் தான் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், புத்தம் புதிய நிகழ்ச்சிகள் பலவும் அவர் நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
இப்போது தான் தனது காலில் ஏற்பட்ட பிரச்சனையால் எந்த நிகழ்ச்சியையும் நடத்தாமல் உள்ளார்.
அண்மையில் கனெக்ட் படத்திற்காக நடிகை நயன்தாரா ஸ்பெஷல் பேட்டி எடுத்திருந்தார்.
மறுமணம்
தொகுப்பாளினியும், நடிகையுமான டிடிக்கு ஸ்ரீகாந்த் என்பவருடன் திருமணம் நடைபெற்று விவாகரத்தும் நடந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். தற்போது தனியாக தனது அம்மாவுடன் வசித்து வரும் டிடிக்கு மறுமணம் என கூறப்படுகிறது.
கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அவர் மறுமணம் செய்ய இருப்பதாக தெரிவிக்கின்றனர், ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை.







