நேரடியாக சரத்குமாரை தாக்கி பேசிய விஷால்

ரம்மி சூதாட்டத்தால் நிறைய அசாபம்விதம் நடப்பதால் இதனை பலரும் எதிர்த்து வருகிறார்கள்.

இதைத்தொடரந்து ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த பிரபல நடிகர் சரத்குமார் மீது பல சர்ச்சை கருத்துக்கள் எழுந்துள்ளது.

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது பற்றி சரத்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதில் அளித்த அவர் ” எனக்கு ஓட்டு போட சொன்னேன் அதை செய்வதில்லை அப்போ நான் சொல்லி ரம்மி மட்டும் விளையாடுவாங்காள “.

நடிகர் விஷால்
இந்நிலையில் தற்போது விஷால் ரம்மி விளையாட்டை குறித்து பேசியுள்ளார்.

அதில், ” ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது ஆனால் நான் அதை நிராகரித்து விட்டேன். உழைத்து சம்பாதிக்கும் பணம் மட்டும் நிலைத்து நிற்கும். தவறான வழியில் சம்பாரித்த பணம் என்றும் உதவாது” என கூறியுள்ளார்.

விஷால் நேரடியாக சரத்குமாரை தாக்கி பேசியுள்ளார் என பலரும் சமூக வலைத்தளங்கில் கூறி வருகிறார்கள்.