முடிவிற்கு வர இருக்கும் பிரபல தொலைக்காட்சி சீரியல்கள்

விஜய் டிவி
பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கட்டிப்போட்டுள்ள விஜய் டிவி சீரியல்கள் மூலமும் தாய்மார்களின் வரவேற்பை பெற்றுள்ளார்கள்.

சீரியல் என்றாலே சன் தொலைக்காட்சி தான் என்ற பார்வை மாறி இப்போது மக்கள் ஜீ தமிழ், விஜய் டிவி என நிறைய பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எனவே தொலைக்காட்சிகளிலும் தரமான தொடர்களை ஒளிபரப்புவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள்.

முடிவுக்கு வரப்போகும் தொடர்கள்
TRPயில் டாப்பில் இல்லாத தொடர்களுக்கு சில மாதம் நேரம் கொடுத்து பார்க்கும் தொலைக்காட்சி அப்போதும் ரீச் பெறவில்லை என்றால் முடிவுக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்.

அப்படி தான் இப்போது விஜய் தொலைக்காட்சி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. TRPயில் முன்னேற்றம் இல்லாத நம்ம வீட்டு பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, மௌன ராகம் 2 போன்ற தொடர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார்களாம்.

இந்த தகவல் சீரியல் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.