ஜனனியை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் 6
பிக்பாஸ் 6வது சீசன் என்பது மக்களின் அதிக வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இதுவரை வந்த 5 சீசன்களை தாண்டி இந்த 6வது சீசனிற்கு ஒரு தனி வரவேற்பு கிடைத்துள்ளது.

ஒவ்வொரு போட்டியாளரும் அவர்களது விளையாட்டை விளையாடுகிறார்கள், சிலர் மட்டும இன்னும் மிக்சர் சாப்பிடுகிறார்கள் என ரசிகர்கள் அதிகம் கலாய்த்து வருகிறார்கள்.

இலங்கையில் இருந்து கலந்துகொண்ட செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவை போல இந்த சீசனில் கலந்துகொண்ட ஒரு தொகுப்பாளர் ஜனனி.

கோபத்தில் ரசிகர்கள்
ஜனனியை ஆரம்பத்தில் ரசிகர்கள் அடுத்த த்ரிஷா, அடுத்த லாஸ்லியா என நிறைய ஆர்மியை கிளப்பினார்கள். ஆனால் ஜனனி வர வர மோசமாக நடந்துகொள்ள ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.

அப்படி அண்மையில் அவர் ரச்சிதாவை பற்றி மோசமாக விமர்சனம் செய்ய அந்த வீடியோவை போட்டு ரசிகர் ஒருவர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதோ அவரது பதிவு,