தமிழ் சினிமாவில் ‘அபியும் நானும்’, ‘சர்வம் தாளமயம்’, ‘ஜெய் பீம்’, ‘காற்றின் மொழி’, ‘விக்ரம்’, உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் இளங்கோ குமரவேல். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் திரைக்கதை குழுவிலும் இவர் இடம் பெற்றிருந்தார்.
இவர் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சமீபத்தில், ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் நடிகர் இளங்கோ குமரவேல் நடந்து சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இவரது செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், போலீசார் கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்து செல்போனை மீட்டனர்.