பொருளாதார நெருக்கடியினால் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்

மருத்துவ சேவையில் வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டால் வைத்தியசாலைக்குள் போராட்டம் தேற்றம் பெறும். பொருளாதார நெருக்கடியினால் 200 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். ஆகவே மிகுதியாக இருக்கும் வைத்தியர்களையாவது தக்க வைத்து கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(25.11.2022) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பொருளாதார பாதுகாப்பு மருத்துவ சேவைத்துறையில் தாக்கம் செலுத்தியுள்ளது.

வைத்தியர்கள் சேவையிலிருந்து ஓய்வு பெறும் வயதெல்லையை மறுபரிசீலனை செய்யுமாறு சுகாதாரதுறை செயற்குழு கூட்டத்தின் போது பல முறை வலியுறுத்தியுள்ளேன்.

குருணாகல் வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவின் விசேட வைத்தியர்களுள் இருவரும் களுத்துறை பொது வைத்தியசாலையில் இரண்டு மகப்பேற்று பிரிவு விசேட வைத்தியர்களும் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்கள்.