ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற பெயரில் இயங்கி வந்த பாலியல் தொழில் விடுதி பொலிசாரால் சுற்றிவளைப்பு!

நீர்கொழும்பில் தகாத தொழிலில் ஈடுபட்ட எட்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெண்கள் கைது
ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த பாலியல் தொழில் மையங்களில் பணியாற்றிய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் இந்த சுற்றி வளைப்பினை மேற்கொண்டுள்ள போது மஹாவில்ல, பாணந்துறை, பிட்டிகல, ஹாலிஎல, வெல்லவான, பெல்தொட்ட மற்றும் மஹாபொத்தானெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 முதல் 46 வயது வரையிலான பெண்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்தேகநபர்கள் இன்று (20. 11.2022) நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.