டொனால்ட் ட்ராம்பிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் பிறப்பித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை, உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து டுவிட்டரில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வன்முறைகளைத் தூண்டும் வகையில் டுவிட் பதிவுகளை இட்டதாக குற்றம் சுமத்தி ட்ராம்பின் கணக்கு முடக்கப்பட்டு, தடையும் விதிக்கப்பட்டது.

டுவிட்டர் கணக்கு முடக்கம்
இவ்வாறான ஓர் பின்னணியில் ட்ராம்பின் கணக்கு முடக்கம் தொடர்பில் எலான் மஸ்க் கருத்துக் கணிப்பு ஒன்றை நடாத்தியுள்ளார்.

இதன் போது கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய 51.8 வீதமானவர்கள் ட்ரம்பின் கணக்கு முடக்கத்தை நீக்குமாறு கோரியுள்ளனர்.

சர்ச்சைகள்
மக்களின் குரலுக்கு அமைய ட்ரம்பின் கணக்கு முடக்கம் நீக்கப்படும் என மஸ்க் டுவிட் செய்துள்ளார்.

இதேவேளை, ஏதேனும் தெளிவான காரணங்கள் இன்றி தடை செய்யப்பட்ட கணக்குகளின் தடைகள் நீக்கப்பட மாட்டாது எனவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு தடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.