இலங்கையில் இருந்து ஓமனுக்கு ஆட் கடத்தில் ஈடுபட்ட மற்றுமோர் சந்தேக நபர் கைது!

ஓமானுக்கு இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்னண் குகனேஷ்வரன் என்ற தமிழரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பு

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றின் பிரதிநிதியாக கடமையாற்றியுள்ளார்.

மேலும், மனிதக் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இதுவரை இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றையதினம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபருடன் இன்று கைது செய்யப்பட்ட தமிழருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாய் மற்றும் ஒமான் மற்றும் ஆகிய நாடுகளில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக தெரிவித்து சுற்றுலா விசாவின் மூலம் அவர்களை அழைத்து சென்று அவர்களை பலவந்தமாக தொழில்களில் ஈடுபடுத்தியுள்ளதாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.