முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு குறித்து வெளியாகியுள்ள செய்தி!

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வதற்காக முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யும் போது 500 ரூபாவை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

உரிய ஆவணங்களுக்காக அத்தொகை அறவிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் ஒதுக்கீடு

ஏறக்குறைய 25,000 பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.