காதலியை அடித்து கொன்றதாக ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கிய கனேடிய நடிகர்

தமது காதலியை சுத்தியலால் அடித்து கொன்றதாக கனேடிய நடிகர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீது பதியப்பட்டிருந்த இரண்டாம் நிலை கொலை வழக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஜூலை மாதம் நடந்த இச்சம்பவத்தில் ரொறன்ரோ நடிகர் Bronson Lake குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தன்று 33 வயதான Kim Gagne என்பவரின் உடல் நலன் தொடர்பில் விசாரிக்க உளவியல் காப்பக செவிலியர் ஒருவர் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.

அந்த மருத்துவமனைக்கு சென்றிருந்த நபர், Bronson Lake என்பவர், தமது காதலியை சுத்தியலால் தாக்கியதாகவும், இதனால் அவர் சுய நினைவிழந்து சரிந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிசார் சம்பவப்பகுதிக்கு விரைந்து, Kim Gagne என்பவருக்கு என்ன ஆனது என விசாரித்துள்ளனர். பூட்டப்பட்டிருந்த குடியிருப்பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

படுக்கையறை ஒன்றில் ஆடைகள் இல்லாமல் ரத்தவெள்ளத்தில் Kim Gagne சடலமாக மீட்கப்பட்டார். தலையில் பலமாக பலமுறை தாக்கப்பட்டதால், அவர் மரணமடைந்துள்ளதாக கூறப்பட்டது.

அத்துடன் ரத்தக்கறையுடன் சுத்தியல் ஒன்றையும் பொலிசார் மீட்டனர். இதனையடுத்து CAMH என்ற உளவியல் காப்பகத்திற்கு விரைந்த பொலிசார் Bronson Lake என்பவரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் தீர்ப்பளிக்கப்படும் என ஒன்ராறியோ உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.